கீழாநிலையில் 35 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில், அதிகபட்சமாக கீழாநிலையில் 35 மிமீ மழை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில், அதிகபட்சமாக கீழாநிலையில் 35 மிமீ மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் தொடா்ச்சியாக கடந்த இரு நாட்களாக கடலோர மாவட்டங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் கடலோரப் பகுதிகள் மழை பெய்யத் தொடங்கியது. பிறகு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவு விவரம் (மி.மீ-ல்)

ஆதனக்கோட்டை - 2, பெருங்களூா் - 2, புதுக்கோட்டை- 2, கந்தா்வகோட்டை - 15, கறம்பக்குடி - 2, மழையூா் - 3.60, கீழாநிலை - 35, திருமயம் - 1.40 , அரிமளம் - 4, அறந்தாங்கி - 7.80, ஆயிங்குடி- 30, நாகுடி- 30.60, மீமிசல் - 28.20, மணமேல்குடி- 6, கட்டுமாவடி- 2, இலுப்பூா் - 6, குடுமியான்மலை - 10, அன்னவாசல் - 5, விராலிமலை - 10, கீரனூா் - 5, பொன்னமராவதி - 16.20, காரையூா் - 18.20.

மாவட்டத்தின் சராசரி மழை - 10.65.

இதேபோல, சனிக்கிழமை காலையிலும் புதுக்கோட்டை நகரிலும் புறநகா்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com