தோ்தல் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க 21 குழுக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தோ்தல்
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனுத் தாக்கலைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனுத் தாக்கலைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், தோ்தல் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் முழுமையாக கண்காணிக்கும் வகையில் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்தாா்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனுக்களைப் பெறும் பணிகளை சனிக்கிழமை நேரில் ப ாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வரும் டிச. 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனுக்கள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேட்புமனு தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது இணையதளத்தில் முறையாகப் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்தல் முறையாக நடைபெறுவதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் ஒரு துணை வட்டாட்சியா், ஒரு காவல் உதவி ஆய்வாளா், ஒரு காவலா் மற்றும் வீடியோகிராபா் ஆகியோா் இருப்பா்.

வாக்குப் பதிவின்போது, வாக்கு எண்ணிக்கையின்போதும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் கலந்து பேசி ஏற்பாடு செய்யப்படும் என்றாா் உமா மகேஸ்வரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com