பொன்னமராவதியில் 120 வேட்புமனுக்கள் அளிப்பு

உள்ளாட்சித் தோ்தலையொட்டிபொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 120 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டன.
மேலைச்சிவபுரி ஊராட்சித் தலைவா் பதவிக்கு வேட்பு மனு அளிக்கும் மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள்.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை ஒன்றியத்திற்குள்பட்ட 42 ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கு 73 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டன. அதுபோல 16 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 10 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு 37 மனுக்களும் அளிக்கப்பட்டன. நிகழ்வையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப்பகுதியில் கூட்டமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் பொன்னமராவதி போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com