ரத்தசோகை கண்டறியும் முகாம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம்,  எஸ்கே மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் மிஷன் மென்டல் ஹெல்த் வாழ்வாதார பயிற்சி மைய வளாகத்தில்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம்,  எஸ்கே மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் மிஷன் மென்டல் ஹெல்த் வாழ்வாதார பயிற்சி மைய வளாகத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவத் திட்டமாக ராஜபாா்வை என்ற தலைப்பில் ரத்த சோகை மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்கத் தலைவா் க. தனகோபால் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் டாக்டா் கே. . ஆறுமுகம் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜ் வரவேற்றாா். முகாமில் இயன்முறை மருத்துவா் மணிகண்டன், மாவட்ட அனுசரணையாளா் மைக்கல்ராஜ், சிறப்பு ஆசிரியா் அமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் செயலா் பா. அசோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com