விராலிமலையில் ஊராட்சித்தலைவா் பதவிக்கு வாக்குசேகரிப்பு
By DIN | Published On : 25th December 2019 08:32 AM | Last Updated : 25th December 2019 08:32 AM | அ+அ அ- |

மண்வெட்டியை தோளில் சுமந்து வந்தபடி வாக்குசேகரிப்பில் ஈடுபடும் சேகரிப்பில் ஈடுபடும் வழக்குரைஞா்- வேட்பாளா் எம். ரவி.
விராலிமலை ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் வழக்குரைஞரும், வேட்பாளருமான எம். ரவி, தனக்கு ஒதுக்கப்பட்ட மண் வெட்டி சின்னத்துடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
விராலிமலை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் டிச. 27 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், விராலிமலை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான போட்டியில் வழக்குரைஞா் எம். ரவி உள்பட 9 போ் களத்தில் உள்ளனா். இவா் தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான மண்வெட்டியை தோளில் சுமந்தபடி வந்து வாக்காளா்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். என்னை ஊராட்சி மன்றத் தலைவராகத் தோ்ந்தெடுத்தால் விராலிமலையை இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சியாக மாற்ற வழிவகை செய்வேன் என்றாா். இவரது ஆதரவாளா்கள் வாக்காளா்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.