தீத்தாம்பட்டி நொண்டிக்கருப்பர் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி தீத்தாம்பட்டி நொண்டிக்கருப்பர், சின்னடைக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சி தீத்தாம்பட்டி நொண்டிக்கருப்பர், சின்னடைக்கி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி ஆலவயல் விக்னேஷ் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு செய்தனர். 
விழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். கருப்புக்குடிப்பட்டி தமிழாசிரியர் சிஎஸ். முருகேசன் குடமுழுக்கு விழா வர்ணனை செய்தார். 
விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. பொன்னமராவதி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com