சுடச்சுட

  

  அறந்தாங்கியில் பாரதி முற்றம் சார்பில் தமிழர் திருநாள் சிலம்பு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன.
  பாரதி முற்றம் நிறுவனர் மற்றும் அஜாய் சிலம்பு பாசறையின் தலைவர் க.அஜாய்குமார் கோஷ் போட்டிகளுக்கு தலைமை வகித்தார். பாரதி முற்றம் ஒருங்கிணைப்பாளர்கள் கொடிவயல் செல்லையா, ஆசிரியை கவிதா மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
  போட்டிகளை, வெஸ்ட்லி ஆங்கிலப் பள்ளியின் தாளாளர் ஜெ.எம்.ஹரிஹரன் தொடக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு மதுரை கீழவளவு காவல் ஆய்வாளர் ஆர். சங்கீதா, இந்திய மருத்துவக் கிளை அறந்தாங்கி முன்னாள் தலைவர் ஜெ.லெட்சுமிநாராயணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.சிவயோகம், மணமேல்குடி வர்த்தக சங்க செயலாளர் மு.சாமியப்பா உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
  போட்டிகளை, கராத்தே சிலம்பு மாஸ்டர்கள் அ.முத்துக்குமார், கே.ஜீவானந்தம், எம்.கார்த்திகேயன், எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் நடத்தினர். போட்டிகளில்  பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai