சுடச்சுட

  

  நெடுவாசலில் பள்ளி மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

  By DIN  |   Published on : 13th February 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
  இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்பக் கழகம், கடல் மிதவைத் திட்ட குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையில் அருள் முத்தையா, ஜி.வெங்கடேசன், திருமுருகன், சுந்தரவடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் கஜா புயலில் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.  
  இந்நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள், தென்னை விவசாயிகளுக்கு சுமார் 4 ஆயிரத்து 300 தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 
  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இரா.ராஜலிங்கம் தலைமை வகித்தார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் எம்.ராமசாமி, நூலகர் ஸ்ரீ வெங்கட்ரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ச.இளையராஜா நன்றி கூறினார். 
  இதுகுறித்து குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் இரா.வெங்கடேசன் கூறுகையில், "பசுமை பூமி திட்டம் சார்பில்  புயல் பாதித்த பகுதிகளில் 10 கிராமங்களில், 3 ஆயிரம் குடும்பங்களுக்கு 7 ஆயிரத்து 800 தென்னங் கன்றுகள், 3 ஆயிரத்து 200 பலவகை மரக்கன்றுகள், கடந்த டிச.1 முதல் இதுவரை 5 முறை வழங்கப்பட்டு, சுமார் 100 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai