மார்ச் 4-இல் ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் எனக்கோரி வரும் மார்ச் 4 ஆம் தேதி புதுக்கோட்டை

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் எனக்கோரி வரும் மார்ச் 4 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம் நடத்த தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. 
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். கண்ணையன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. பாலச்சந்திரன், துணைத் தலைவர் டி. சின்னையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலர் கே.ஆர். தர்மராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.
மாநிலத் துணைத் தலைவர் க. சுரேஷ் மாநிலக் குழு முடிவுகளை விளக்கியும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி வரும் மார்ச் 4 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில்  பெருந்திரள் முறையீட்டுப் போராட்டங்களை நடத்த மாநிலக்  குழு முடிவு செய்துள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டை நடத்திட முடிவு செய்யப்பட்டது.
கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியை முறைகேடாக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலுள்ள அம்மா உணவகத்துக்கு வழங்கிவிட்டு, கட்டுமானத் தொழிலாளர்களை அங்கு சென்று உணவருந்தச் சொல்வது சரியல்ல. இதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com