சுடச்சுட

    

    குடுமியான்மலை வேளாண் கல்லூரியில்  சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 12th January 2019 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    கல்லூரியின் பண்ணை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர்  கு.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து சமத்துவப் பொங்கல் வைத்தனர். முன்னதாக பேராசிரியர்கள், மாணவர்கள், பண்ணைத் தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாணவ மன்ற ஆலோசகர் ஆ. குருசாமி மற்றும் இணை மாணவ மன்ற ஆலோசகர்  இரா. கலையரசு, பண்ணை மேலாளர் அ. ஆண்டர்சன் அமலன்குமார்  ஆகியோர் வழி நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai