சுடச்சுட

  

  புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
  வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜ. பரசுராமன் தலைமை வகித்தார். 
  கல்லூரி அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். நியு செஞ்சுரி புத்தக நிலையம், தில்லி ஹிமாலயா புத்தக நிலையம், எஸ்டி புத்தக நிலையம் ஆகிய பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றன.
  சூழலியல், கல்வி, அறிவியல் உள்ளிட்ட புத்தகங்கள் அதிகளவில் விற்பனையானதாக நியு செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் சுரேஷ் தெரிவித்தார். புத்தகங்கள் அனைத்துக்கும் 20 சதவிகித கழிவு வழங்கப்பட்டது.நிறைவில் கல்லூரி நூலகர் சி. ராஜாராம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai