சுடச்சுட

  

  புயல் நிவாரணம் கோரி கந்தர்வகோட்டை வட்டாட்சியரகம் முன்  காட்டுநாவல் ஊராட்சி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  இங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகள் முழுமையாக கிடைக்கவில்லை என அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்தும்  பலனில்லாததால்  ஆத்திரமடைந்த அவர்கள் வட்டாட்சியரகம்  முன் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். 
  இதையடுத்து அரசு அதிகாரிகள் தற்போது நிவாரணம் வழங்க முடியாது.  விடுபட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினர்.  
  இதை ஏற்காத மக்கள் அலுவலகம் முன் புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார், வருவாய் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பெண்கள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai