சுடச்சுட

  

  பொன்னமராவதி அருகேயுள்ள மேலமேலநிலை, தூத்தூர், கண்டியாநத்தம் ஊராட்சி க.புதுப்பட்டி, மைலாப்பூர் ஊராட்சி அஞ்சுளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் திமுக ஊராட்சி சபைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  திமுக சார்பில் மக்களின் குறைகளை அறிய சிறப்பு ஊராட்சி சபைக்கூட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை மேலமேலநிலை, தூத்தூர், கண்டியாநத்தம் ஊராட்சி க.புதுப்பட்டி, மைலாப்பூர் ஊராட்சி அஞ்சுபுளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது. 
  கூட்டங்களில் திருமயம் எம்எல்ஏ  எஸ். ரகுபதி பங்கேற்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். முன்னாள் எம்எல்ஏ  ஆலவயல் சுப்பையா, ஒன்றியச் செயலர் அ. அடைக்கலமணி, நகரச் செயலர் அ. அழகப்பன், முன்னாள் ஒன்றியச் செயலர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சாகுல்ஹமீது, சுப. முரளிதரன், ஆண்டியப்பன், சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai