சுடச்சுட

  

  விராலிமலை அருகேயுள்ள கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்  வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
  257 பேருக்கு சைக்கிள்களை வழங்கி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியது: அரசின் நலத் திட்டங்கள் மூலம் மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வி கற்க முடியும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அதிக பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு தேவையான புதிய கட்டடங்கள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் போன்ற பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  விராலிமலை முருகன் மலைக்கோயிலுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ. 4.25 கோடியில் மலை உச்சிக்கு வாகனங்கள் செல்லும் வகையில் மலைப்பாதை விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் எஸ். பழனியாண்டி,  இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் சிவகுமார் (பொ), ஆர். எம். அய்யப்பன், சி. தீபன்சக்கரவர்த்தி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  கந்தர்வகோட்டையில்... கல்லாக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், தச்சன்குறிச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என மொத்தம் 1499 பேருக்கு கந்தர்வகோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. விழாவில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ நார்த்தாமலை ப. ஆறுமுகம் தலைமை தாங்கி சைக்கிள்களை வழங்கினார். கந்தர்வகோட்டை ஒன்றிய கழகச் செயலர் ஆர். ரெங்கராஜன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ராமசந்திரன் உமாதேவி கீதா சந்தோஷ்மேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஜெயக்குமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai