உரிய பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரி மனு

ஆவுடையார்கோவில் பகுதியில்  2017-2018-ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையாக  ரூ. 22 ஆயிரம் வழங்க 

ஆவுடையார்கோவில் பகுதியில்  2017-2018-ஆம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையாக  ரூ. 22 ஆயிரம் வழங்க வேண்டும்  எனக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
80 சதவீதம்  பயிர்க் காப்பீட்டு  நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வந்த பிறகும்  ஆவுடையார்கோவில்  வட்டத்தை சேர்ந்த அமரடக்கி,  பூவலூர், கரூர், சாட்டியகுடி, தென்னமாரி, சுந்தனாவூர், ஆய்குடி, செங்கானம், வசந்தனூர், குமூளுர், புண்ணியவயல், பன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில்  
1 ஏக்கருக்கு 22 ஆயிரம் வழங்குவதற்கு பதிலாக ரூ. 5 ஆயிரத்தி ஐநூறு மட்டுமே வழங்கப்பட்டது. 
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  ஆவுடையார்கோவில் முன்னாள்  ஒன்றியப் பெருந்தலைவர் இரா. துரைமாணிக்கம் தலைமையில் அறந்தாங்கிகூட்டுறவு  விற்பனை சங்கத் தலைவர் சங்கிலிமுத்துக் கருப்பையா, பூவலூர்முன்னாள் ஊராட்சிதலைவர் சரவணபெருமாள் உள்ளிட்ட விவசாயிகள் ஊர்வலமாக வந்து  ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் ஜமுனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் இதுகுறித்து ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com