புயல் நிவாரணத் தொகையை கல்விக் கடனுக்கு வரவு வைத்த வங்கி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் தனக்கு வந்த புயல் நிவாரணத்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் தனக்கு வந்த புயல் நிவாரணத் தொகையை மகள் பெற்ற கல்விக்கடன் நிலுவையில் வங்கி வரவு வைத்ததாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். 
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ராஜேந்திரன், விவசாயி. இவரது மகள் ரம்யா கொத்தமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த 2009-ல் ரூ. 2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்தார். 
இந்நிலையில்  ராஜேந்திரனின் தென்னை மரங்கள், பயிர்கள் புயலால் முழுமையாகச் சேதம் அடைந்ததற்காக தமிழக அரசு  ரூ. 34 ஆயிரம் நிவாரணத் தொகையை இவரது வங்கிக்  கணக்கில்  செலுத்தியது.
இதை தனது செல்லிடப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி வாயிலாக அறிந்த விவசாயி தொகையை பெற வங்கிக்குச் சென்றபோது அந்தத் தொகையை வங்கி நிர்வாகம் ஏற்கெனவே மகளுக்காக வாங்கியிருந்த கல்விக் கடனுக்கு வரவு வைத்துக் கொண்டது தெரியவந்தது. மேலும் ராஜேந்திரன், அவரது மனைவி ராணி ஆகியோருக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும் தொகையையும் வங்கி வரவு வைத்தது தெரியவந்தது.  புயலால் பாதிக்கப்பட்டோருக்கு கடன், வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில்  வங்கி நிர்வாகத்தின் செயலால் அதிருப்தியுற்ற ராஜேந்திரன் நிவாரணத் தொகையைப் பெற்றுத் தரக்கோரி  மாவட்ட ஆட்சியரகத்தில்  வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com