மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வுப் போட்டி

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் மாணவர்களுக்கு இலவச கட்டாயக் கல்விச் சட்டம், பெண் கல்வி, சுகாதாரம் 

பொன்னமராவதி வட்டார வள மையத்தில் மாணவர்களுக்கு இலவச கட்டாயக் கல்விச் சட்டம், பெண் கல்வி, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
போட்டிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் தொடங்கிவைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ, மாணவிகளுக்கு ஒவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளியளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியருக்கு திட்ட அலுவலகத்திலிருந்து சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டார அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு பரிசுக் காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் விவேக், கதிர்காமம், ராஜி,வெங்கட்ராமன், நாகராஜன், அழகு, முத்துலெட்சுமி, முகமது அல்காப், ஆசிரியர் பயிற்றுனர்கள் அன்பழகன், பரிசுத்தம், மதனகுமார், சக்திவேல்பாண்டி, சரவணன்,ரஹிமாபானு ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். பொன்னமராவதி ஒன்றியப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் புவனேஸ்வரி செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com