சுடச்சுட

  


  அறந்தாங்கியைத் தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
  புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்துக்கு, அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் சுப்ரஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் மழலை கனி, பாப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிறுவனர்- தலைவர் ஷெரீப் கலந்து கொண்டு உரையாற்றினார். புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 
  கட்சியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai