சுடச்சுட

  

  தனியார் மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு விழா

  By DIN  |   Published on : 13th January 2019 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழாவில், நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றிருந்தன.
  வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியின் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி தாளாளரும் முதல்வருமான கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.
  துணைக் காவல் கண்காணிப்பாளர் பி. ஆறுமுகம் கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். நகரக் காவல் ஆய்வாளர் பரவாசுதேவன், திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் கருணாகரன், மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் கவிதா ராஜசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். 
  முறையான ஒலிம்பிக் ஜோதி, அணிவகுப்பு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இத்துடன், நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம், தாயம், கிட்டிப்புல், பல்லாங்குழி, டயர் வண்டி, உரியடித்தல், இளவட்டகக்கல், கிளி ஜோசியம் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. பள்ளி மாணவ, மாணவிகளுடன் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai