சுடச்சுட

  

  பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா, ரங்கோலிபள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா, ரங்கோலி

  By DIN  |   Published on : 13th January 2019 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மெளண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
  பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் இணைந்து பொங்கல் வைத்தனர். பள்ளி வளாகம் முழுவதும் கோலம் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 
  விழாவில், பள்ளியின் இயக்குநர் ஜோனத்தன் ஜெயபாரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வர் ஜலஜாகுமாரி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
  பாரதி கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் ரங்கோலி போட்டிகள்:
  புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் ரங்கோலிப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
  கல்லூரியின் தலைவர் கு. தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் கே.ஆர். குணசேகரன், அறங்காவலர்கள் கே. ரங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் மா. குமுதா, கவிஞர் மு. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ரங்கோலிப் போட்டியில் மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முதலிடத்தை வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பி. சாலை சந்திரா, ஆர். அகிலா, ஐ. விஜி பசுபதி ஆகியோர் கொண்ட அணி முதலிடத்தையும், வேதியியல் துறையைச் சேர்ந்த ரேணுகா தேவி, பிரவீனா, வைதேகி ஆகியோரைக் கொண்ட அணி இரண்டாமிடத்தையும், கணிதவியல் துறையைச் சேர்ந்த அபிநயசுந்தரி, மீனா, நந்தினி ஆகியோரைக் கொண்ட அணி மூன்றாமிடத்தையும் பெற்றனர். 
  மேலும் கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல் போன்ற போட்டிகளும் நடைபெற்றன. 
  வைரம்ஸ் மெட்ரிக். பள்ளியில்...
  புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் மற்றும் கலைப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. போட்டிகளை பள்ளியின் தாளாளர் கே. ரகுபதி சுப்பிரமணியன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். முதல்வர் ஜி. ரேவதி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேனாள் சுப்பிரமணியன், நாச்சியம்மை, துணை முதல்வர் எஸ். சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை கணிதவியல் துறைத் தலைவர் க. டயானா உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் செய்திருந்தனர்.
  விராலிமலை...: விராலிமலை விவேகா மெட்ரிக். பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தாளாளர் வெல்கம்மோகன் தலைமை வகித்தார். 
  விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கோலப்போட்டி நடனம், ஒயிலாட்டம், தப்பாட்டம், உழவின் சிறப்பு குறித்த பேச்சுரை உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பொங்கலிட்டு படைக்கப்பட்டன. 
  ஏற்பாடுகளை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
  அறந்தாங்கி: நைனாமுகமது மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் திருநாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் நை.முகமது பாரூக் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ராபர்ட் அலெக்ஸாண்டர் முன்னிலையில் மாணவிகள் பொங்கல் வைத்தனர். கோலப் போட்டி மற்றும் குச்சுப்பிடி நடனம் மற்றும் பல்வேறு கிராம கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாய் ஜெய்மனோகரன் தலைமை வகித்தார். 
  அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சி.கண்ணையா தலைமை வகித்தார். முதல்வர் க.சுரேஸ்குமார் முன்னிலை வகித்தார். அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் செ. கோகிலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் சிலம்பம், யோகா உள்ளிட்டவற்றை மாணவ மாணவிகள் செய்து காட்டினர். 
  அறந்தாங்கி கார்னிவல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஆடிட்டர் ஆர்.தங்கதுரை தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ரெங்கசாமி தலைமையில் கல்லூரி மாணவிகள் பராம்பரியப்படி பொங்கல் வைத்தனர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai