சுடச்சுட

  


  புதுக்கோட்டை அறிவியல் இயக்க அலுவலக வளாகத்தில் ச. ஆரோக்கியசாமி எழுதிய வர்ணம், சாதி, தீண்டாமை- இந்தியாவில் மட்டுமா? என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனர் வை.ந. தினகரன் விழாவுக்குத் தலைமை வகித்தார். புலவர் துரை. மதிவாணன் நூலை வெளியிட, மருத்துவர் ச. ராமதாஸ் அதனைப் பெற்றுக் கொண்டார். வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் ஆர். சேவியர், பேராசிரியர் த. மணி, கம்பன் கழகத்தின் செயலர் இரா. சம்பத் குமார், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, நிலா பாரதி, ராணியார் பள்ளி ஆசிரியை சாந்தா, வாசகர் பேரவைச் செயலர் சா. விஸ்வநாதன் உள்ளிட்டோரும் நூல் குறித்துப் பேசினர். நூலாசிரியர் ச .ஆரோக்கியசாமி ஏற்புரை வழங்கினார். ச. மத்தியாஸ் வரவேற்றார். விஜயலட்சுமி நன்றி கூறினார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai