புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு, மனிதச் சங்கிலி

பொன்னமராவதி பேரூராட்சியின் சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது.


பொன்னமராவதி பேரூராட்சியின் சார்பில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மனிதச் சங்கிலி சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வ. சுலைமான்சேட் தலைமை வகித்தார். பேரூராட்சி அலுலகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே வந்து நிறைவுற்றது. பேரணியில் பங்கேற்றோர் புகையில்லாமல் பொங்கல் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர். தொடர்ந்து, பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பங்கேற்று புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி மனிதச் சங்கிலி நடத்தினர். 
கள்ளச்சாராயத்துக்கெதிரான விழிப்புணர்வு : பொன்னமராவதியில் வருவாய்த் துறை சார்பில் மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, வட்டாட்சியர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் வரவேற்றார். கோட்ட கலால் அலுவலர் மனோகரன் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிக்கூறினார். பொன்னமராவதி கிராமநிர்வாக அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளில் வழியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
கந்தர்வகோட்டை : அரசு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் கள்ளச்சாராயத்துக்கெதிரான விழிப்புணர்வுப்பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கந்தர்வகோட்டை வெள்ளைமுனியன் கோயில் மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்றது. கல்லூரி முதல்வர் (பொ) கிருஷ்ணவேணி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் புதுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் மனோகரன், துணை வட்டாட்சியர் வி.ராமசாமி, வருவாய் ஆய்வாளர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com