இன்று மங்கதேவன்பட்டி ஜல்லிக்கட்டு

கந்தர்வகோட்டையில் மாட்டுக் கயிறு, சலங்கைமணி, மாலை விற்பனை மந்த நிலையில் உள்ளது.

கந்தர்வகோட்டையில் மாட்டுக் கயிறு, சலங்கைமணி, மாலை விற்பனை மந்த நிலையில் உள்ளது.
கந்தர்வகோட்டை பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடித்த கஜா புயலால் பல்வேறு கால்நடைகள் இறந்தன. இதில் மாடுகளின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினாலும்,  மாட்டுப் பொங்கல் விழா களை கட்டவில்லை.  
இதில் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு, நெற்றிக்கயிறு, கழுத்து கயிறு மற்றும் திரிஷ்டி கயிறு, கால் சலங்கை, கழுத்து சலங்கை மணி உள்ளிட்டவற்றை புதிதாக அணிவித்து பூ, பொட்டு, வண்ணங்கள் பூசி வழிபடுவது வழக்கம். இந்நிலையில்  கஜா புயல் பாதிப்பால் கயிறு, சலங்கைமணி மாலை விற்பனை குறைந்துள்ளதாகவும், மக்கள் விரும்பி வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இயற்கைச் சீற்றத்தால் கந்தர்வகோட்டை சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இந்தாண்டு கலைகட்டாத மாட்டுப் பொங்கல் விழாவாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com