குளமங்கலம் கோயில் குதிரைக்கு ஜிகினா மாலை அணிவிக்க தடை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் உள்ள குதிரை சிலைக்கு  ஜிகினா மாலை அணிவிக்க நிகழாண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்துசமய அறநிலையத் துறை கண்காணிப்பில் உள்ள இக் கோயிலில் சுமார் 33 அடி உயர குதிரை சிலைக்கு ஆண்டுதோறும் மாசி மக நட்சத்திரத்தையொட்டி  நடக்கும் விழாவில் 1,200-க்கும் மேற்பட்ட ஜிகினா மாலைகள் அணிவிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதால் நிகழாண்டு பிப்.19-ல் நடைபெற உள்ள திருவிழாவின்போது  இந்தக் குதிரை சிலைக்கு ஜிகினா மாலை அணிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து குளமங்கலம் கிராமத்தினர் கூறியது:  பழமையான  இக்கோயிலுக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை காகித மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு , ஜிகினா மாலை அணிவிக்கப்பட்டது. திருவிழா முடிந்ததும் மாலைகளை அகற்றி அங்குள்ள வில்லுனி ஆற்றில் போடப்படும். கடந்த இரு ஆண்டுகளில் அகற்றப்பட்ட மாலைகள் ஆற்றில் மட்காமலேயே உள்ளன. ஜிகினா மாலைகள் பிளாஸ்டிக் மாலையாக கருதப்படுவதால் இந்த மாலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், சிலர் அணிவிக்கலாம் எனவும் கூறுகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com