ஜல்லிக்கட்டு நினைவு: நக்கீரர் சிலைக்கு மாலை
By DIN | Published On : 24th January 2019 11:15 AM | Last Updated : 24th January 2019 11:15 AM | அ+அ அ- |

ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் நினைவு தினமான புதன்கிழமை கீரமங்கலத்தில் உள்ள நக்கீரர் சிலைக்கு இளைஞர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வலியுறுத்தி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அப்பகுதி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோயிலில் உள்ள நக்கீரர் சிலையிடம் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, இறுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை நீக்கப்பட்டு போராட்டம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜன. 23 ஆம் தேதி போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்து இளைஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதே நாளில் கடந்த ஆண்டும் நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து, நிகழாண்டும் அப்பகுதி இளைஞர்கள் நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.