சுடச்சுட

    

    அன்னவாசல் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல் அருகே புல்வயல் ஊராட்சிக்கு உள்பட்ட சன்டப்பட்டி சிறகிகுளம் பாலக்கட்டைக்கு கீழே இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக புல்வயல் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், அன்னவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 
    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
    விசாரணையில் இறந்து கிடந்தவர் சன்டப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து (28) என்பது தெரியவந்தது. இவரது உடம்பில் ரத்த காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai