சுடச்சுட

  

  பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப்போட்டியில் பல்வேறு அணியினர் பங்கேற்று விளையாடினர்.
  காரையூர் காவல்துறை மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கபடிப்போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 24 அணியினர் பங்கேற்று விளையாடினர். 
  முதல் பரிசினை காரையூர் அணியினரும், இரண்டாம் பரிசினை பொன்னமராவதி அணியினரும், மூன்றாம் பரிசினை நெய்வேலி அணியினரும், நான்காம் பரிசினை தூத்தூர் அணியினரும் பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai