சுடச்சுட

  

  புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட  முத்துக்குடா கடற்கரை கிராமத்தில்  கடலோர பாதுகாப்பு குழுமத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
  விழாவிற்கு மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலெட்சுமி தலைமை வகித்தார்.
  உதவி ஆய்வாளர்கள் பா.ரகுபதி, ஜவஹர், ராஜ்குமார் மற்றும் காவலர்கள், மத்திய வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பு நிறுவன அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்வது, மரக்கன்றுகள் நடவு போன்ற பணிகளை மேற்கொண்டனர்.  கடலோர பாதுகாப்பு குழுமத்தின் வெள்ளி விழா விளக்க துண்டு பிரசுரம் வழங்கியும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai