குடுமியான்மலையில் 69 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில், குடுமியான்மலையில் அதிகபட்சமாக 69 மி.மீ மழை பதிவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவில், குடுமியான்மலையில் அதிகபட்சமாக 69 மி.மீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழையின்றி வெயில் அதிகமாக வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து அந்த மழை, நகர, புறநகரப் பகுதிகளில் பெய்யத் தொடங்கியது. இரவிலும் சில பகுதிகளில் மழை தொடர்ந்தது.
புதன்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவு விவரம்: (மி.மீயில்)
ஆதனக்கோட்டை - 1 மி.மீ, பெருங்களூர்- 24, புதுக்கோட்டை- 41, ஆலங்குடி- 25.50, கந்தர்வக்கோட்டை- 2, கீழாநிலை- 30.40, திருமயம்- 10.40, அரிமளம்- 14.60, அறந்தாங்கி- 23, ஆயுங்குடி- 7.80, மீமிசல்- 5.20, ஆவுடையார்கோவில்- 11.40, மணமேல்குடி- 3.20, இலுப்பூர்- 8, குடுமியான்மலை- 69, அன்னவாசல்- 27, உடையாளிப்பட்டி- 3, கீரனூர்- 36.40, பொன்னமராவதி- 3, காரையூர்- 50. மாவட்டத்தின் சராசரி மழை- 15.84 மி.மீ.
புதன்கிழமை மாலையிலும் புதுக்கோட்டை நகரப் பகுதியிலும், இலுப்பூர் போன்ற பகுதியிலும் லேசான மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com