தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை பிடித்தவர் கைது
By DIN | Published On : 13th July 2019 07:37 AM | Last Updated : 13th July 2019 07:37 AM | அ+அ அ- |

மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கு, பிரதாபிராமன்பட்டினம் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சாக்கு மூட்டையை தூக்கிச்செல்வதாக தகவல் கிடைத்தது.
இதன் பேரில், கடலோர காவல் ஆய்வாளர் அன்னலெட்சுமி, உதவி ஆய்வாளர் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர் பிரதாபிராமன்பட்டிணத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான நபரின் பெயர் முகமது அமீர்தீன் என்பதும், அதே ஊரைச் சேர்ந்த அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் பல்லிகள் 340, கடல் அட்டைகள் 16, கடல்குதிரை 1 உள்ளிட்டவை இருந்தன. இதையடுத்து, அவரை கைது செய்து வனத்துறையிடம் போலீஸார் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.