மக்கள் தொகை விழிப்புணர்வு மனிதச் சங்கிலி
By DIN | Published On : 13th July 2019 07:42 AM | Last Updated : 13th July 2019 07:42 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் சோ. விஜய்மாணிக்கம் தலைமை வகித்தார். சாலைப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கண. மோகன்ராஜ், சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் க. தனகோபால், மரம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ராஜா, சிவாஜி சமூக நலப் பேரவையின் தலைவர் ஏ. சுப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.