சுடச்சுட

  


  அறந்தாங்கி அருகே காரணியேந்தல் காட்டுமஸ்தான் ஒலியுல்லா தர்ஹா சந்தனகூடு விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
  காரணியேந்தலில் பழமை வாய்ந்த காட்டுமஸ்தான் ஒலியுல்லா தர்ஹா உள்ளது. சமுதாய நல்லிணக்க விழாவாக ஆண்டு தோறும் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெறும்.  இந்த ஆண்டு திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்களில் திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடு மற்றும் குதிரை வண்டி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பெரிய மாடு மற்றும் நடு மாடு என இரு பிரிவாக நடைபெற்ற போட்டிகளில்  28 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. அதே போல் குதிரை வண்டி பிரிவில் 13 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai