சுடச்சுட

  


  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
  பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.
  காமராஜரின் சாதனைகள், காமராஜரின் எளிமை வாழ்வு, கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. 
  ஆசிரியை தீபா தமிழிலும், ஆசிரியை ஜோஸ்பின் ஜெயந்தி ஆங்கிலத்திலும் காமராஜர் குறித்து உரை நிகழ்த்தினர். மழலையர் வகுப்பு மாணவ, மாணவிகள் காமராஜர் வேடம் அணிந்து வந்திருந்தனர். போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவுக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கெளரி, ரம்யா, வசுமதி உள்ளிட்டோரும் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai