ஊதியக்குழுவின்  21 மாத நிலுவைத் தொகையை வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது


ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் வட்டக் கிளைப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாநில அரசு ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாரபட்சமின்றி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 
குடும்ப ஓய்வூதியர்களுக்கான நல நிதியை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும். 
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு விருப்ப உரிமை வழங்குவதைப் போல மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் விருப்ப உரிமை வழங்க வேண்டும். புதுக்கோட்டை நகரில் தடையில்லா குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்துக்கு வட்டச் செயலர் சி. கருப்பையா தலைமை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார்.
மாவட்டத் தலைவர் வே. ஜெகநாதன், மாவட்டச் செயலர் பி. ஆழ்வாரப்பன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com