பஞ்சாத்தி கண்மாய் புனரமைக்கும் பணி துவக்கம்

அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி கண்மாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணி சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.


அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி கண்மாயை குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணி சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை நீர்வளஆதாரத்துறை  மூலம் தெற்கு வெள்ளாறு உப கோட்டம் சார்பில்,  முதலமைச்சரின் குடி பராமரிப்பு திட்டம் 2019-2020 -ன் கீழ் பஞ்சாத்தி கண்மாயை புனரமைக்கும் பணிக்காக ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பஞ்சாத்தி  கண்மாய் பாசனதாரர் விவசாயிகள் சங்கம் சார்பில் பூமி பூஜை செய்து தூர்வாரும் பணிகள்  தொடங்கப்பட்டது. 
அறந்தாங்கி கோட்டாட்சியர் குணசேகரன் தலைமை வகித்தார். அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபு, பொதுப்பணித்துறை பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும்  கண்மாய் பாசனதாரர் சங்க விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com