விவசாயக் கழிவுகளில் இருந்து 200 பில்லியன் மெட்ரிக் டன் எரிபொருள் உற்பத்தி

உலகில் விவசாயக் கழிவுப் பொருள்களில் இருந்து ஆண்டுக்கு 200 பில்லியன் மெட்ரிக் டன் எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவதாக ஓமன் நாட்டின் சுல்தான் க்யூபாஸ் பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியர் என். சிவகுமார

உலகில் விவசாயக் கழிவுப் பொருள்களில் இருந்து ஆண்டுக்கு 200 பில்லியன் மெட்ரிக் டன் எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவதாக ஓமன் நாட்டின் சுல்தான் க்யூபாஸ் பல்கலைக்கழக உயிரியல் துறைப் பேராசிரியர் என். சிவகுமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின்  உயிர் தொழில்நுட்பவியல் துறையில் சார்பில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், நுண்ணுயிரிகள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குவதற்கான அணுகுமுறைகள் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: தாவரங்களில் பல்வேறு விதமான வேதிவினைகள் மூலம் எரிபொருள்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அறிவியல் வளர்ச்சியினால் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு அதன் மூலமாக எரிபொருள்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. 
தற்போது அறிவியலின் வேகமான வளர்ச்சியால் விவசாயப் பொருள்கள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் விலங்கின கழிவுப்பொருள்கள் மூலம் எரிபொருள் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.   உயிரி எரிபொருள் உற்பத்தியைப் பொருத்தவரை கார்போஹைட்ரேட்டுகள், லிக்னோ செல்லுலோஸ் போன்ற வேதிப்பொருள்களும், நுண்பாசிகள் போன்ற நுண்ணுயிரிகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. லிக்னோ செல்லுலோஸ் உள்ள விவசாயக் கழிவுப்பொருள்கள் மூலம் ஆண்டொன்றுக்கு 200 பில்லியன் மெட்ரிக் டன் எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. 
இதன் மூலம் அதிகமான அளவு ஆற்றல் பெறப்படுகிறது.  தாவரங்களின் உண்ண முடியாத பாகங்களிலிருந்து எரிபொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சோளத்தட்டை, கரும்புத்தட்டை மற்றும் சிலவகையான புல்வகைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு எரிபொருள் தயாரிக்கப்படுகிறது என்றார் சிவகுமார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com