Enable Javscript for better performance
பிலாவிடுதியில் ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பிலாவிடுதியில் ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

    By DIN  |   Published On : 18th July 2019 04:39 AM  |   Last Updated : 18th July 2019 04:39 AM  |  அ+அ அ-  |  


    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    கறம்பக்குடி வட்டம், பிலாவிடுதியில் நடைபெற்ற  மக்கள் தொடர்பு முகாமுக்கு தலைமை வகித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி பேசினார். முகாமில் 158 பயனாளிகளுக்கு ரூ.31,60,000 மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள், 36 பயனாளிகளுக்கு ரூ.4,32,000 மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், 4 பயனாளிகளுக்கு ரூ.48,000 மதிப்பீட்டில் விதவை உதவித்தொகைக்கான ஆணைகள், 2 பயனாளிகளுக்கு ரூ.48,000 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகள், 18 பயனாளிகளுக்கு ரூ.1,54,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
    மேலும், 31 பயனாளிகளுக்கு ரூ.9,32,500 மதிப்பீட்டில் இறப்பு நிவாரண உதவித் தொகைக்கான ஆணைகள், 13 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள், 7 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.65,234 மதிப்பீட்டில் விலையில்லா சலவைப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
    வேளாண் துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு மானிய விலையில் ரூ.1,41,590 மதிப்பீட்டில்  வேளாண் இடுபொருள்கள்,   தோட்டக்கலைத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முழு மானியத்தில் ரூ.28,000 மதிப்பீட்டில் மா மற்றும் கொய்யா ஒட்டு செடிகள் என மொத்தம் முகாமில் 293 பேருக்கு ரூ.50,09,324 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர். 
    முகாமில், வேளாண் இணை இயக்குநர் சுப்பையா,  கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அருணாசலம், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp