ஜூலை 26-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 24th July 2019 09:23 AM | Last Updated : 24th July 2019 09:23 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு வரை முடித்த இளைஞர்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.