பொன்னமராவதியில் ஊரக வளர்ச்சித் துறைஅலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 24th July 2019 09:26 AM | Last Updated : 24th July 2019 09:26 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத்தலைவரும், ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.சுப்பிரமணியனை பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.பால் பிரான்ஸ்சிஸ், மாவட்டத் துணைத்தலைவர் கே.குமார், முத்துகிருஷ்ணன், இணைச்செயலர்கள் செல்வம், கணேசன், பொருளாளர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.