Enable Javscript for better performance
அறந்தாங்கியில் போக்குவரத்து விதிமுறைகள் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    அறந்தாங்கியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பேருந்துக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    அறந்தாங்கி ரோட்டரி கிளப், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இணைந்து  இக்கண்காட்சியை நடத்தின.   ஓட்டுநர் பயிற்சி மற்றும் கண்காணிப்புப் பேருந்தின் உள்பகுதியில்  சாலை விதிகள் குறித்த விளக்கங்கள், புகைப்படங்கள் மூலம் சாலை விதிகள் குறித்த விளக்கங்கள் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.மேலும்,  பேருந்தின் பின்பகுதியில் தொலைக்காட்சி மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு விளக்கங்கள் குறும்படமாக மாணவ, மாணவிகளுக்குத் திரையிடப்பட்டது. 
    அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை  கோட்ட மேலாளர் ஆறுமுகம், அறந்தாங்கி கிளை மேலாளர் தங்கராஜ், ஓட்டுநர் மேற்பார்வையாளர்கள் சொக்கலிங்கம் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்டோர் சாலைப் பாதுகாப்புகள் குறித்த விவரங்களை  விளக்கிக் கூறினர். 
    இந்த நிகழ்வுக்கு  அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் 
    க.சுரேஷ்குமார் தலைமை வகித்தார், ரோட்டரி மாவட்ட துணை 
    ஆளுநர் ஆ.கராத்தே கண்ணையன், அறந்தாங்கி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் ஜி.அசோக்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் சி.கோகிலா உள்ளிட்டோர்  நிகழ்வில் பங்கேற்றனர். அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, விக்னேஷ்வரபுரம் நடுநிலைப் பள்ளி, செலக்சன் மெட்ரி மேல்நிலைப் பள்ளி, அன்னை மீனாட்சி நாச்சியார் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவ மாணவிகள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai