Enable Javscript for better performance
ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அறந்தாங்கி வட்டார வளமையத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான புதிய பாட நூல் விளக்கப் பயிற்சி செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
    பயிற்சியினை  அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் அருள் துவங்கி வைத்தார், வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் மற்றும் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.  பயிற்சி அறந்தாங்கி வட்டார வளமையம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.
    வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.சிவயோகம் பேசுகையில், இப் பயிற்சியின் நோக்கம் 2 முதல் 5-ஆம் வகுப்பு வரை புதிய பாடத் திட்டத்திற்கான பாடப் பொருள்களை தெளிவாக கற்றுக் கொடுத்தல், பாடவாரியாக  அனைத்து பாடங்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ள கேள்விகள் மற்றும் அடிப்படை த் திறனை  வளர்க்கும் வகையில் எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு வசதியாக உள்ளதாகவும் கூறினார்.
    பயிற்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை பார்வையிட்டு  ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர் சுகன்யா, சாந்தி, சியாமளா, மகேஸ்வரி, சசிக்குமார், செல்வராஜ் மற்றும்  செல்வராஜ் உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
    விராலிமலையில்... விராலிமலையில் நடந்த பயிற்சி முகாமில், வட்டாரக் கல்வி அலுவலர் துரையரசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ச. புவனேஸ்வரி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.  
    பயிற்சியில் கருத்தாளர்களாக ரோஸ்மேரி சகாயராணி, அனந்தராமன், ஜோசப் ரொசாரியோ கில்பர்ட், மீனாட்சி, பெரியசாமி, நார்பத் பீலிஸ், பாக்யலட்சுமி, சுமதி மற்றும் சத்யப்ரியா ஆகியோர் செயல்படுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai