Enable Javscript for better performance
உணவு பாதுகாப்பு, கலப்படம் கண்டறியும் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டை அருகே தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் உணவு கலப்படம் கண்டறியும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், புனல்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் உணவு கலப்படம் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு கலந்து கொண்டு தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் ஜெ.அற்புதவிஜயசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
    முகாமில், கல்லூரி மாணவர்களிடையே உணவு பாதுகாப்பு குறித்தும், உணவு பண்டங்களில் கலப்படம் பற்றியும், கலப்படப் பண்டங்களின் வேறுபாடுகள் மற்றும் கலப்படம் கண்டறிதல் பற்றியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வி. அருண் பிரசாத், ஆர். விஜயகுமார் ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர். முகாமில், கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai