Enable Javscript for better performance
ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற  கவரப்பட்டி பள்ளிக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற  கவரப்பட்டி பள்ளிக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 25th July 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள்கிழமை நேரில் பாராட்டினார்.
    புதுதில்லியைச் சேர்ந்த ஆம்பிஷன் அசெஸ்மென்ட் நிறுவனத்தினர்,  விராலிமலை ஒன்றியம், கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை, வருகைப்பதிவு, கல்வி பயிற்றுவித்தலில் கையாளும் முறைகளைக் கண்காணித்தனர். தினசரி கால அட்டவணை, தேர்வுக்குத் தயார் செய்தல், விடைத்தாள் திருத்தும் விதம், தேர்ச்சி விதிதம் குறித்தும், பள்ளியின் சுகாதாரம், கட்டட உறுதித்தன்மை, ஆய்வகங்களின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு, தூய்மைப் பராமரிப்பு போன்றவை குறித்தும் ஆய்வு செய்தனர்.
    ஆய்வின் முடிவில்  6 முதல் பிளஸ் 2  வரை  சிறந்த கல்வி அளித்தமை, மாணவர்களின் நல்லொழுக்கம், பணிவு, படைப்பாற்றல், பொது அறிவுத்திறன் போன்றவற்றை பாராட்டி இந்த நிறுவனத்தினர் ஐ.எஸ். ஓ. தரச்சான்றை அண்மையில் அளித்தனர். இதையறிந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திங்கள்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களைப் பாராட்டினர். நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.சாந்தி( பொ) ,இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.ராஜேந்திரன் ( பொ)  ஆகியோர் உடனிருந்தனர்.  நிறைவில், பள்ளித் தலைமையாசிரியர்  இரா.சிவகுமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai