Enable Javscript for better performance
கம்பன் பெருவிழாவில் சிறப்பு வழக்காடு மன்றம்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை  கம்பன் கழகத்தின் 44 ஆவது ஆண்டு கம்பன் பெருவிழாவின் 6 ஆம் நாளான புதன்கிழமை மாலை "குற்றங்களே  குணமாகக் கொண்ட ராவணன் குற்றவாளி' என்ற தலைப்பிலான வழக்காடு மன்றம் நடைபெற்றது.
    மதுரையைச்  சேர்ந்த ரேவதி சுப்புலட்சுமி வழக்கைத் தொடுத்துப் பேசினார். திருவாரூர் ரெ. சண்முகவடிவேல் வழக்கை  மறுத்துப் பேசினார். தேவக்கோட்டையைச் சேர்ந்த கண. சிற்சபேசன் நீதிபதியாக இருந்து பேசினார்.
    நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா பேசியது: இளைஞர்கள் பல துறைகளிலும் பணியாற்றச் செல்கிறார்கள். அதனால் எல்லாத் துறைகளுக்கும் பொதுவான அம்சங்கள் பல இன்றைய இளைஞர்களுக்குத் தேவைப்படுகிறது. குறிப்பாக கால மேலாண்மை, அறிவியல், சுற்றுச்சூழல், நட்பு, மனோவியல் போன்ற எல்லா அம்சங்களும் இன்றைய இளைஞர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இவையனைத்தும் தமிழ் இலக்கியங்களில் உள்ளன  என்பதுடன், குறிப்பாக கம்பனில் மிகுதியாக உள்ளன. எனவே, இளைஞர்கள் கம்பனில் மூழ்கிப் படித்தால்  வாழ்க்கையில் முன்னேறலாம் என்றார் சுப்பையா.
    முன்னதாக ஆர்.எஸ். காசிநாதன் வரவேற்றார். முடிவில் வெ. முருகையன் நன்றி கூறினார். கம்பன் கழகச் செயலர் ரா. சம்பத்குமார் ஒருங்கிணைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai