Enable Javscript for better performance
கார் கவிழ்ந்து 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை கார் கவிழ்ந்து 3 பேர் காயமடைந்தனர். 
    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மருங்கூரணி கிராமத்திலிருந்து அந்தப் பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்கு காரில் சென்றுவிட்டு பட்டுக்கோட்டை சாலையில் ஓட்டை பாலம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் கவிழ்ந்தது. 
    இதில் மருங்கூரணி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி (45), அவரது மனைவி முத்துலெட்சுமி (35), கார் ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    பின்னர் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai