Enable Javscript for better performance
கீழாத்தூர் நாடியம்மன் கோயில்  பூச்சொரிதல்- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் நாடியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
     ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்திபெற்ற கீழாத்தூர் நாடியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 
    இதையொட்டி, கீழாத்தூர், கட்ராம்பட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மேளதாளங்கள், வானவேடிக்கைகள் முழங்க அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை ஊர்வலமாக எடுத்துவந்து கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடகாடு போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai