Enable Javscript for better performance
சீல் வைத்த கடையிலிருந்து 755 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சீல் வைத்த கடையிலிருந்து 755 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 25th July 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறந்தாங்கி நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்த கடையில் இருந்து புதன்கிழமை 755 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
    அறந்தாங்கி நகராட்சி சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை 3.5 டன் நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.84, 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நெகிழி  பொருள்கள் விற்பனை செய்துவந்த கிடங்கு பூட்டப்பட்டிருந்தது. உரிமையாளரையும் தொடர்பு கொள்ளமுடியாததால், நகராட்சி அலுவலர்கள் கடைக்கு சீல் வைத்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கடை உரிமையாளர் டி.ஆர். பாலமுருகன் மீண்டும் கிடங்கைத்  திறக்க உதவுமாறும், தவறுக்கு வருந்துவதாகவும் நகராட்சி ஆணையருக்கு மனு அளித்தார். அதன் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் த. முத்துகணேஷ், துப்புரவு ஆய்வாளர் சி.சேகர், துப்புரவு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மூலம் உரிமையாளர் முன்பு குடோன் திறக்கப்பட்டது.
     அங்கு, 755 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai