Enable Javscript for better performance
சுதர்சன் கல்லூரியில் நாணயங்கள் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை பெருமாநாட்டிலுள்ள சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி பழைமையான நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலைகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
    கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் முகமது யூனுஸ் தலைமையில், முனைவர் எஸ். சேகர் கண்காட்சியைத் திறந்து வைத்தார். கண்காட்சியில், மன்னர் காலத்து அரிய வகை நாணயங்கள், உலக நாடுகள் முழுவதும் பயன்படுத்தப்பட்ட அரிய அஞ்சல் தலைகள் இடம்பெற்றிருந்தன. கல்லூரியைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் கண்காட்சியைக் கண்டு ரசித்தனர். 
    தொடர்ந்து மாணவர்களுடன் இதுபோன்ற பழைமையான நாணயங்கள் குறித்தும், அஞ்சல் தலைகள் குறித்தும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தின் தலைவர் எஸ்.டி. பஷீர்அலி விளக்கிப் பேசினார். கல்லூரி முதல்வர் மு. முருகேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai