Enable Javscript for better performance
நீர்நிலைப் பராமரிப்புப் பணிகளில்  கூடுதல் கவனம் தேவை: கண்காணிப்பு அலுவலர் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    நீர்நிலைப் பராமரிப்புப் பணிகளில்  கூடுதல் கவனம் தேவை: கண்காணிப்பு அலுவலர் அறிவுரை

    By DIN  |   Published on : 25th July 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் பராமரிப்புப் பணிகளில் அனைத்துத் துறை அலுவலர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், வனத்துறை அரசு செயலருமான ஷம்பு கல்லோலிகர் அறிவுறுத்தினார்.
    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அவர் மேலும் பேசியது:  புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கவும், சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் அனைத்துத் துறை அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும். ஏற்கெனவே இதுதொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
    மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, நீர்நிலைகள் பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்துப் பணிகளை எவ்வித புகார்களுக்கும் உட்படாமல் சீராக மேற்கொள்ள கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றார் ஷம்பு கல்லோலிகர்.
    கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, கஜா மறுவாழ்வுத் திட்டத்தின் கூடுதல் திட்ட அலுவலர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் ஆனந்த்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி, வேளாண்துறை இணை இயக்குநர் மு. சுப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai