Enable Javscript for better performance
படைப்புழு தாக்குதல் விழிப்புணர்வு, வயல்வெளி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கந்தர்வகோட்டை அருகே  மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் வயல்வெளி ஆய்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள  குன்றாண்டார்கோவில்  வட்டார வேளாண்மை அலுவலகம் சார்பில் கண்ணாங்குடி ஊராட்சியில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழு வயல்வெளி ஆய்வு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது . முகாமிற்கு குன்றாண்டார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆ . இளஞ்செழியன் தலைமை வகித்தார். 
    படைப்புழு தாக்குதல் அறிகுறிகள் குறித்தும் ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு, வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.ஆர். லதா ஆகியோர் விளக்கிக் கூறினார்.   படைப்புழு கட்டுப்பாட்டில் உயிரியல் பூச்சி கட்டுப்பாடு, மேலாண் முறைகள் குறித்தும் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய பயிற்சி உதவியாளர் (வேளாண் விரிவாக்கம் ) முனைவர் கே.சி. சிவபாலன் விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் ஆ . இளஞ்செழியன் மக்காச்சோளம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜீவ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருளரசு, சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai